தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / technology

யூடியூப், UPI ஆப்ஸ்; ரூ.2,799 விலையில் ஜியோபோன் பிரைமா 2! - jiophone prima 2 - JIOPHONE PRIMA 2

JioPhone Prima 2 Price: பட்ஜெட் போன், கைக்கு அடக்கமான போன், தேவையான ஆப்ஷன்கள் மட்டும் போதும் என்று இருப்பவர்களுக்காக ஜியோ போன் பிரைமா 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யூடியூப், UPI ஆப்ஸ் போன்ற பல தேவையான சேவைகள் இதில் உள்ளன.

JioPhone Prima 2
ஜியோபோன் பிரைமா 2 (Jio)

By ETV Bharat Tech Team

Published : Sep 14, 2024, 5:37 PM IST

ஹைதராபாத்: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் தங்களின் ஜியோபோன் பிரைமா 2 (JioPhone Prima 2) போனை அறிமுகம் செய்துள்ளது. 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான ஜியோ போன் பிரைமா 4ஜி போனின் வெற்றியைத் தொடர்ந்து புதிய மாடல் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய மாடல் பிரைமா 2 போனில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் நிறுவப்பட்டுள்ளது.

ஜியோபோன் பிரைம 2 விலை ரூ. 2,799 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஒற்றை லக்ஸ் ப்ளூ (Luxe Blue) நிறத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா மற்றும் ஜியோ இணையதளம் வழியாக இந்த போனை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

இல்லையென்றால், நேரடியாக ஜியோ கடைகளுக்குச் சென்று இந்த போனை வாங்கலாம். சிறந்த வடிவமைப்பு, சமூக வலைத்தளங்கள், வீடியோ அழைப்பு போன்ற பல அம்சங்களுடன் வரும் ஜியோபோன் பிரைமா 2 குறித்த கூடுதல் விவரங்களத் தெரிந்துகொள்ளலாம்.

ஜியோபோன் பிரைமா 2 (Jio)

ஜியோபோன் பிரைமா 2 அம்சங்கள் (JioPhone Prima 2 Specifications):

ஜியோபோன் பிரைமா 2 ஒரு வளைந்த 2.4-இன்ச் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது ஒரு பிரீமியம் லுக்கை வழங்குகிறது. இந்த பட்டன் போனில் குவால்காம் சிப்செட் நிறுவப்பட்டுள்ளது. இதன் காரணமாக போனை நாம் எளிதாக தங்குதடையின்றி பயன்படுத்தலாம். நேரடி வீடியோ அழைப்பு அம்சத்திற்காக முன்பக்கம் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பேஸ்புக் போன்ற சில சமூக வலைத்தளங்களும் இந்த போனில் இயக்கமுடியும்.

மிக முக்கியமாக, யூடியூப் செயலியைப் பயன்படுத்தி இந்த போனில் வீடியோ பார்த்துக்கொள்ளலாம். 23 மொழி ஆதரவுடன் வரும் இந்த போனில், ஜியோபே (JioPay) UPI செயலி, 3.5 mm ஹெட்போன் ஜாக், FM ரேடியோ, டார்ச் லைட் போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும், இந்த போனை நீண்ட நேரம் திறம்பட இயக்க 2,000mAh பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது.

KAI OS உதவியுடன் இந்த ஃபீச்சர் போன் இயங்குகிறது என்பது கூடுதல் தகவல். பொதுவாக பழைய நோக்கியா போன்களை நினைத்துபார்க்கும், சிறிய பட்டன் போன், இரண்டு மூன்று நாள்கள் பேட்டரி திறன் கொண்ட போன் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.

ABOUT THE AUTHOR

...view details