என்னதான் ஐபோன், பிக்சல், சாம்சங் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டாலும், பெருவாரியான மக்களால் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களே அதிகம் கவனத்தில் கொள்ளப்படுகிறது. அந்தவகையில், உங்களுக்காக ரூ.15,000-க்கும் குறைவாக சந்தையில் விற்பனை செய்யப்படும் சிறந்த 5ஜி போன்களின் பட்டியலை எடுத்து வந்துள்ளோம்.
இதில் தரமான வடிவமைப்பு, சிறந்த பேட்டரி, தெளிவான டிஸ்ப்ளே, விலைக்கேற்ற கேமரா போன்ற சிறப்பம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு பட்டியல் உருவாக்கப்பட்டது. எனவே, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival) மற்றும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே 2024 (Flipkart Big Billion Day 2024) சலுகை தினங்களும் அடுத்தடுத்த நாள்களில் வருவதால், நல்ல சலுகையில் இந்த ஸ்மார்ட்போன்களை நம்மால் வாங்க முடியும்.
சாம்சங் எம்34 5ஜி (Samsung M34 5G):
கொரிய நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போனான கேலக்ஸி எம்34 5ஜி மாடலில் பல அம்சங்கள் உள்ளன. 6.5-இன்ச் முழுஅளவு எச்டி+ சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட், சாம்சங் எக்சினாஸ் 1280 சிப்செட், 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், பின்பக்கம் 50 மெகாபிக்சல் + 8 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் சென்சார்கள் அடங்கிய மூன்று கேமராக்கள், 13 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆகியவை கிடைக்கும். ஸ்மார்ட்போனை அதிக நேரம் இயக்க பெரிய 6,000 mAh பேட்டரி இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் ஷாப்பிங் (Flipkart shopping) தளத்தில் விற்பனைக்கு இருக்கும் சாம்சங் எம்34 5ஜி ஸ்மார்ட்போனை பயனர்கள் ரூ.14,500 என்ற விலைக்கும் கீழாக வாங்க முடியும்.
ரியல்மி நார்சோ 70 5ஜி (Realme Narzo 70 5G):
சீனாவின் பிபிகே நிறுவனத்தின் கீழ் இயங்கும் ரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போனும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ரியல்மி நார்சோ 70 5ஜி ஸ்மார்ட்போன், மீடியாடெக் டிமென்சிட்டி 7050 சிப்செட், 6.67-அங்குல முழுஅளவு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட், 6ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், பின்பக்கம் 50 மெகாபிக்சல் + 2 மெகாபிக்சல் சென்சார்கள் அடங்கிய இரட்டை கேமராக்கள், 16 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆகியவை கிடைக்கும். இதில் 5,000 mAh பேட்டரி கிடைக்கிறது. அமேசான் இந்தியா ஷாப்பிங் (Amazon India shopping) தளத்தில் விற்பனைக்கு இருக்கும் இந்த ஸ்மார்ட்போனை பயனர்கள் சுமார் ரூ.13,500 என்ற விலையில் வாங்கலாம்.
இதையும் படிங்க: ஜிபிஎஸ் முதல் AI வரை: கால்பந்து அனுபவத்தை வேற லெவலாக்கும் புதுமையான டெக்னாலஜிகள்!
மோட்டோ ஜி34 5ஜி (Moto G34 5G):