தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்.. வீடியோ போட மாட்டேன் என வீடியோ வெளியிட உத்தரவு! - TTF Vasan Bail - TTF VASAN BAIL

TTF arrested in Madurai: செல்போன் பேசியபடி கார் ஓட்டியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் டிடிஃப் வாசன் மதுரை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

டிடிஃப் வாசன், மதுரை நீதிமன்றம் புகைப்படங்கள்
டிடிஃப் வாசன், மதுரை நீதிமன்றம் புகைப்படங்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 4:18 PM IST

மதுரை:மதுரை வண்டியூர் பகுதியில் செல்போன் பேசிய படி வாகனத்தை இயக்கியதாக, பிரபல யூடிபர் டிடிஃப் வாசனை (TTF Vasan) கைது செய்த மதுரை அண்ணாநகர் போலீசார், அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவரை மதுரை மாவட்ட நடுவர் நீதிமன்றம் எண் 6-ல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

அப்போது, டிடிஃப் வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "4ஆம் தேதி டிடிஃப் வாசன் படத்தில் நடிக்க இருக்கிறார். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். ஏற்கனவே ஏற்பட்ட விபத்தில் அவரது கண்ணில் குறைபாடு உள்ளதால், கண் கண்ணாடி இல்லாமல் வெளியே செல்லவோ அல்லது பயணம் செய்யவோ முடியாது.

காவல் துறையினர் வேண்டும் என்றே அவர் மீது 308 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை இயக்கினார் என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? அவர் வெளியிட்டுள்ள வீடியோவை வைத்து தான் 5 மணி நேரத்தில் கடக்க வேண்டிய இடத்தை 2.30 மணி நேரத்தில் கடந்ததாக அவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், அவர் கடந்த மே 15ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்செந்தூர் வரை சென்ற போது, அந்த சாலையில் வாகனத் தணிக்கையில் போலீசார் ஈடுபடவில்லையா? அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லையா எனக் கேள்வி எழுப்பிய வழக்கறிஞர், பொதுமக்கள் யாரும் இவர் மீது புகார் தெரிவிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி வாதிட்டார்.

அதனைத் தொடர்ந்து, இனி இது போன்ற வீடியோ வெளியிட மாட்டேன் என வீடியோ வெளியிட வேண்டும் எனக் கூறி அவருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னதாக, ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி, வீலிங் செய்த வழக்கில், அவரது ஓட்டுநர் உரிமத்த 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் தனது கார் மூலம் பயணித்து அதனை வீடியோவாக பதிவு செய்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மதுரையில் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் போது, "என்னை பார்த்து தான் மக்கள் கெட்டு போவார்களா? வீதிக்கு ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. அதைப் பார்த்து பாரும் கெட்டுப்போக மாட்டார்களா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது, நான் மட்டும் போக்குவரத்து விதிமீறல் ஈடுபடுவது போல் என் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது" எனக் கூறினார்.

இதையும் படிங்க:செல்போன் பேசியபடி கார் ஓட்டிய யூடியூபர் டிடிஎஃப் வாசன் மதுரையில் கைது!

ABOUT THE AUTHOR

...view details