தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்துணவு முட்டைகளை திருடி ஆம்லெட் போட்டு பார்டி கொண்டாடிய இளைஞர்கள்.. திண்டுக்கலில் நடந்தது என்ன? - சுட்டிகாலாடிபட்டி அரசு பள்ளி

Dindigul Government School: திண்டுக்கல் மாவட்டம் சுட்டிகாலாடிபட்டி கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் இளைஞர்கள் சிலர் அத்துமீறி சத்துணவு முட்டைகளை திருடி ஆம்லெட் போட்டு மது அருந்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2024, 6:32 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சுட்டிகாலாடிபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகின்றது. இந்த தொடக்கப் பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறை என்பதால், அதே கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் பள்ளியின் சுற்றுச்சுவரைத் தாண்டி உள்ளே சென்று சத்துணவு கூடத்தின் சமையலறையின் பூட்டை உடைத்ததாகக் கூறப்படுகிறது.

அதேபோல், அப்பள்ளி குழந்தைகளுக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட சத்துணவு முட்டைகளையும், அங்குள்ள மசாலா பொருட்களையும் பயன்படுத்தி ஆம்லெட் போட்டு மது அருந்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, நேற்று காலை (ஜன.22) வழக்கம் போல் சத்துணவு கூடத்திற்கு வந்து பார்த்த பணியாளர்கள் சத்துணவு முட்டைகளைப் பயன்படுத்தி ஆம்லெட் போட்டுச் சாப்பிட்டு மது அருந்திய அலங்கோலமான இடத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, இது தொடர்பாகச் சத்துணவு பணியாளர்கள் அவர்களது உயர் அதிகாரிக்குத் தகவல் தெரிவித்தனர்.

மேலும், இளைஞர்கள் சிலர் விடுமுறை நாளில் அத்துமீறி பள்ளியில் உள்ளே நுழைந்து குழந்தைகளுக்காக வைக்கப்பட்டிருந்த சத்துணவு முட்டைகளைத் திருடி ஆம்லெட் போட்டு மது அருந்தியது பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும், கேஸ் சிலிண்டர் மற்றும் மீத முட்டைகள் அரிசி, பருப்பு எண்ணெய்களை உட்பட மற்ற பொருட்களை அப்படியே விட்டுச் சென்றது அவர்களுடைய சிறிது நிம்மதியையும் ஏற்படுத்தியதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கோவையில் தகரக் குடிசையை தாக்கிய யானை.. நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம் - பதைபதைக்கும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details