திருப்பத்தூர்:திருப்பத்தூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமாரின் மகள் இந்துமதி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன், ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் இந்துமதி வீட்டிற்குத் தெரிந்த நிலையில், கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், கார்த்திக் - இந்துமதி தம்பதியினருக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியில் வசித்து வந்த இந்துமதி, திருப்பத்தூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், மீண்டும் இந்துமதி மற்றும் அஜித் குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர், இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில், திடீரென இந்துமதி அஜித் குமாரிடம் பேச மறுத்து, விலகியதாக கூறப்படுகிறது. இதனால், அஜித்குமார் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.