தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - தேனி கோர்ட் அதிரடி..!

தேனியில் இரண்டு சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 10 hours ago

தேனி நீதிமன்றம்
தேனி நீதிமன்றம் (credit - ETV Bharat Tamil Nadu)

தேனி: மாவட்டம் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் உலகநாதன் (34). இவர் கடந்த 06.10.2020 அன்று தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 மற்றும் 10 வயது சிறுவர்களை தூக்கிச் சென்று தனி இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் வீரபாண்டி காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதையும் படிங்க:ஆசிரியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டில் குறைந்த கட்டணம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு!

இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணை முடிந்தது, சாட்சியங்களின் அடிப்படையில் இரண்டு சிறுவர்களை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக குற்றவாளி உலகநாதனுக்கு போக்சோ சட்டப்பிரிவு 5(M)ன் கீழ் 1 ஆயுள் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம், அதைக் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, சட்டப்பிரிவு 5 (g) 6ன் கீழ் குற்றத்திற்காக மேலும் 1 ஆயுள் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம், அதைக் கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளி உலகநாதன் மதுரை மத்திய சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details