சிவகங்கை:திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு இளைஞா் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தொடர்பாக மதகுபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை அருகே மதகுபட்டி மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநரின் மகள் மோனிஷா (24). இவா் சிவகங்கை அரசு மகளிா் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவரை, சிவகங்கை சிங்கம்புணரி அருகேயுள்ள பிரான்மலையைச் சோ்ந்த அவரது உறவினரான மகன் ஆகாஷ் (26) என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு மாணவியின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்தாக தெரிகிறது.
இதையும் படிங்க:பஞ்சாயத்து தலைவியை கொடூரமாக வெட்டிய வழக்கு; நெல்லை ஜேக்கப் உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
இந்த நிலையில், மதகுபட்டிக்கு வந்த ஆகாஷ், வீட்டில் தனியாக இருந்த மோனிஷாவிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதாகவும், அப்போது, அவா்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஆகாஷ் மோனிஷாவை கொலை செய்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மோனிஷா உயிரிழந்த பிறகு ஆகாஷ் தற்கொலை செய்துகொண்டார்.
ஆகாஷ் மற்றும் மோனிஷா இருவரது உடல்களும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுபிப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதகுபட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.