கோயம்புத்தூர்: கோவை ஈஷா யோகா மையம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், "
வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்திற்கு ஜெர்மனியின் விமானப்படை தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இங்கோ கெர்ஹார்ட்ஸ், அவரது மனைவி மற்றும் அதிகாரிகள் வருகை புரிந்திருந்தனர்.
மேலும், இந்திய விமானப் படை வீரர்களுடன் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈஷாவில் எளிய மற்றும் சக்திவாய்ந்த யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டனர். ஈஷா யோக மையத்திற்கு வருகை புரிந்திருந்த பன்னாட்டு விமானப்படை வீரர்களில் ஆண்கள் சூர்ய குண்டத்திலும், பெண்கள் சந்திர குண்டத்திலும் நீராடினர்.
பின்னர் தியானலிங்கம் மற்றும் ஆதியோகியை அவர்கள் தரிசனம் செய்தனர். மேலும், விமானப்படை வீரர்கள் 'ஆதியோகி திவ்ய தரிசனம்' எனும் வீடியோ இமேஜிங் நிகழ்ச்சியையும் கண்டு வியந்தனர். ஈஷாவில் இவ்வீரர்கள் எளிய மற்றும் சக்தி வாய்ந்த 'நாடி சுத்தி, யோக நமஸ்காரம்' என்ற யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்.