திருநெல்வேலி : தமிழ் பண்பாட்டாளரும், எழுத்தாளருமான ராஜ் கௌதமன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று(நவ 13) காலமானார். அவரது உடல் திருநெல்வேலி தியாகராஜ் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் எழுத்தாளர் ராஜ் கௌதமன் உடலுக்கு நேரில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி குடும்பத்தினரிடம் தனது ஆறுதலை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ராஜ் கௌதமன் தனது எழுத்துக்கள் மூலம் தமிழ் உலகத்திற்கு மிகப்பெரிய பங்காற்றியவர். அவரது எழுத்துக்களை அரசு நாட்டுடைமையாக்க வேண்டும்.
எழுத்தாளர் ராஜ் கெளதமன் மறைவுக்கு பா.ரஞ்சித் நேரில் அஞ்சலி (Credits - ETV Bharat Tamil Nadu) அவரது இறப்பை தமிழக அரசு முழு மரியாதையுடன் அரசு சார்பில் நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். எழுத்தாளர் ராஜ் கௌதமன் பெயரில் அரசு ஆய்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவரது பெயரில் விருது வழங்க நடவடிக்கை எடுத்தால் அவரது பெயர் காலம்காலமாக நிலைத்திருக்கும். அவரால் ஈர்க்கப்பட்டவன் நான்.
சினிமாக்களில் அவரது எழுத்துக்களை பயன்படுத்த நான் முயற்சி செய்தேன். சமீபத்தில் நீலம் பப்ளிகேஷன் மூலம் விருது வழங்கி அவருக்கு நாம் பெருமை சேர்த்தோம். தற்போது அவர் நம்மை விட்டு பிரிந்து சென்றது பெரிய வருத்தமும், கவலையும் இருக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)