சென்னை:சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ’சேரா யோகாத்தான் 2024’ என்ற நிகழ்வில் 8 வயதுக் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை கலந்து கொண்ட சூரிய நமஸ்காரம் யோகா போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்வில் 400க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்கார யோகாசனம் மேற்கொண்டனர். இந்நிகழ்வில் இந்திய யோகா சங்கச் செயலாளர் இளங்கோவன், திருமூலர் யோகா மற்றும் இயற்கை உணவு அறக்கட்டளை யோகி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய யோகா சங்கச் செயலாளர் இளங்கோவன் கூறுகையில், "இந்த சூரிய நமஸ்காரம் பயிற்சிகள் உலக அளவில் மிகவும் பிரபலமாக உள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை ஆதிகாலத்திலிருந்து சூரிய நமஸ்காரம் பயிற்சிகள் இருந்து வருகிறது. ஆதித்யா கிருதயம் என்று சொல்லக்கூடிய இந்த சூரிய நமஸ்காரம் இன்று உலகம் முழுவதற்கும் சென்று உள்ளது. சமீபத்தில் கூட பாகிஸ்தானில் இந்த யோகா பயிற்சிகள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.