சென்னை:இயந்திரங்கள் போல சுற்றிக் கொண்டிருக்கும் இன்றைய நவீன மனிதர்களின் வாழ்வில், உணர்ச்சிகளின் வெளிப்பாடாக மாறியிருக்கும் எமோஜிகளுக்கான நாள் தான் இன்று. 2014ம் ஆண்டு எமோஜிபீடியாவின் நிறுவனர் ஜெர்மி பர்ஜ்-ஆல் தொடங்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஜூலை 17ம் தேதி உலக எமோஜி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது (WORLD EMOJI DAY).
மகிழ்ச்சி, கோபம், சோகம், காதல் என நமது உணர்ச்சிகளை மற்றவர்களுக்கு எப்படி புரியவைப்பது என வார்த்தைகளை தேடும் போது, நீங்க கவலைப்படாதீங்க நான் இருக்கேன் என அதை மிக சுலபமாக மாற்றி விடுகிறது இந்த எமோஜிகள்.
எமோஜியின் ஹிஸ்டரி: ஜப்பானிய மொழிச் சொல்லான ‘எமோஜி’-க்கு ‘பட வார்த்தை’ என பொருளாம். ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஐபோனை 2007ல் வெளியிட்டபோது, வாடிக்கையாளர்களை கவர்வதற்காக எமோஜி கீபோர்டை அறிமுகப்படுத்தியுள்ளது. பின்நாட்களில் இது பிரபலமடையவே உலகமெங்கும் இருக்கும் பல்வேறு மக்கள் எமோஜிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
எமோஜி மீனிங்:
👋 கையசைத்தல் - ஒரு உரையாடலை தொடங்குவதற்கு அல்லது முடிப்பதற்கு பயன்படுகிறது.
🙏 கூப்பிய கைகள் - இரண்டு கைகளும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள இந்த எமோஜி, நன்றி அல்லது வணக்கம் போன்ற மரியாதையை குறிக்கிறது.
😂 கண்ணீர் சிந்தும் எமோஜி - கண்ணீருடன் வாய்விட்டு சிரிப்பதை குறிக்கிறது
😶 வாய் இல்லாத முகம் - சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை எனவும் குறிப்பாக, ஏமாற்றம் அல்லது சோகம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துகிறது.