சென்னை:நுங்கம்பாக்கம் நூர்வீராசாமி தெருவில் நகைக் கடை உடன் நகை அடகு கடை வைத்திருப்பவர் விஷால். இவரின் கடையில் நேற்று முந்தினம் மூன்று சவரன் தங்க நகை திருடப்பட்டதாக அளித்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் மாம்பலத்தை சேர்ந்த சுபத்ரா கல்யாணி என்ற பெண்ணை கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து நகை கடைகாரரின் புகார்:நேற்று முன்தினம் 40 வயது மதிக்கத்தக்க பெண், 15 வயது சிறுவனுடன் தனது நகை கடைக்கு வந்து நடை வாங்குவது போல் நடித்து நூதன முறையில் மூன்று சவரன் தங்க நகையை திருடியதாக காவல் துறைக்கு நகை கடைகாரர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
விசாரணை:நுங்கம்பாக்கம் காவல் துறையினரின் விசாரணையில் புகாருக்கு ஆளான சுபத்ரா கல்யாணி தான் திருடியதை போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அந்த நகையை தியாகராய நகரில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும், அதில் ரூ.37 ஏழாயிரத்தை வைத்து சில்லறை கடன்களை அடைத்து விட்டு, மீதிம் இருந்த 83 ஆயிரம் ரூபாயை மகனின் படிப்பு செலவுக்கு உதவும் என வங்கிக் கணக்கில் வைத்துள்ளதாகவும் சுபத்ரா கல்யாணி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் கடந்த மாதம் தியாகராய நகரில் ஒரு நகை கடையில் கைவரிசை காட்டியுள்ளதும், பின் ஒரு வாரம் கழித்து அதே கடைக்கு சென்றபோது கடை பணியாளர்கள் அவரை பிடித்து விட்டதாகவும், அவர்களிடம் காவல்துறையினரிடம் புகார் செய்ய வேண்டாம் என கெஞ்சி உரிய தொகையை தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி பணத்தை செட்டில் செய்துள்ளதும் போலீசார் நடத்திய விசாரணையில் அம்பளமானது.