சென்னை: வேலூர் மாவட்டம் கூத்தாண்டவர் கோயில் தெருவைச் சேர்ந்த பெண் காவலர் லோகேஸ்வரி (வயது 23). இவர் தற்போது கோயம்பேடு போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று காலை காவலர் லோகேஸ்வரி கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள டென்ஸ் ஸ்கொயர் மால் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது டீ அருந்துவதற்காக சென்ற காவலர் லோகேஸ்வரி கேம்ஸ் வில்லேஜ் சிக்னல் அருகே சாலை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த போலீஸ் பூத் மற்றும் பெண் காவலர் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் காவல் லோகேஸ்வரி வலது கால் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் காவலர் லோகேஸ்வரியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:"வண்டி இல்ல..பவர்கட் பிரச்னையை சரி செய்ய முடியாது" நுகர்வோரிடம் மின் ஊழியர் பேசும் ஆடியோ வைரல்!