திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டியை சேர்ந்த எழில்மாறன் சித்தரேவு ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்து வருகிறார். எழில் மாறன் தனது வீட்டில் நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதனை அடுத்து எழில் மாறன் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள் மூலம் விசாரணை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளை கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் எழில் மாறனை பிரிந்து வாழும் அவரது மனைவி ஜெயலட்சுமி ஆள் வைத்து கணவனின் மோட்டார் சைக்கிளை திருட வைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
தன்னைப் பிரிந்து சென்ற கணவன், விலை உயர்ந்த புது மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு ஜாலியாக ஊர் சுற்றுவதை பொறுத்துக் கொள்ளாத மனைவி ஜெயலட்சுமி, தனது உறவினர்கள் உதவியுடன் கணவனின் மோட்டார் சைக்கிளை திருடுவதற்கு திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது.