திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சி 24வது வார்டு ஜான் பிள்ளை சந்துப் பகுதியைச் சேர்ந்தவர் கோபால கண்ணன் (38), இவரது மனைவி அமலா தேவி. இவர் தங்க நகைகளுக்கு பாலிஷ் போடும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டிற்கு அடுத்த வீட்டில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் திண்டுக்கல் திமுக மாமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், செந்தில்குமார் தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதால் தான் தனது கணவர் தற்கொலைக்கு முயன்றதாக கோபால கண்ணனின் மனைவி அமலா தேவி குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாக தனது கணவர் கோபால கண்ணன், செந்தில்குமாரிடம் ரூ.4 லட்சம் கடனாக பெற்றுள்ளார். இதற்கு மாதமாதம் வட்டி கொடுத்து வந்துள்ளார். கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக ரூ.1.5 லட்சம் அசல் பணத்தை கொடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக வட்டி பணம் செலுத்தாமல் இருந்ததால், செந்தில்குமார் எனது கணவர் கோபால கண்ணிடம் இதுவரை வட்டியோடு சேர்த்து ரூ.5 லட்சம் நிலுவையில் உள்ளது என்று கூறினார். இதனால், எனது கணவன், தங்களது வீட்டை விற்று கடனை அடைத்து விடுவதாக கூறியுள்ளார். அதற்கு செந்தில்குமார், எங்களது வீட்டை தானே வாங்கிக் கொள்வதாக கூறி ரூ.15 லட்சத்தை எனது கணவரிடம் கொடுத்துள்ளார்.