சென்னை:நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிக் கட்சிகள் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் முனைப்பு காட்டி வருகின்றன.
அந்த வகையில், வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் இனைந்து தேர்தலைச் சந்திக்கவுள்ளதாக ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மக்கள் நீதி மய்யம் தரப்பிலிருந்து, மக்களவைத் தேர்தலில் 1 தொகுதியும், மாநிலங்களவையில் 1 இடமும் கேட்கப்பட்டு, நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதன் பின்னர், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதற்கான ஆவணம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த நிலையில், தற்போது மக்கள் நீதி மய்யத்தின் X வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், "மதவாத அரசியலுக்கு எதிராக, அரசியலில் குதித்து இருப்பது என்பது பாராட்டுக்குரியது. நாடு இருக்கும் நிலைமையைப் பார்த்து எதிர்கட்சியுடன் கைகோர்ப்பதற்கு துணிச்சல் வேண்டும் (திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவது போன்றும்)
(அதன்பின் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசுவது போன்றும்) இந்த நிலை என்பது ஒரு அவசர நிலை. இது தமிழ்நாட்டிற்கும், தேசத்திற்கும் பயன் உள்ளதாக அமைய வேண்டும். எதிர்வாத சக்திகளுக்கு இது கைகூடி விடக்கூடாது என்பதற்காக நாங்கள் எடுத்து இருக்கும் முடிவு.
இந்த அரசியலை மாற்றுவதற்கான வாய்ப்பை உங்களுக்கு அளித்து இருக்கிறது சரித்திரம். இந்த நேரத்தில் அனைவருமே சகோதரர்கள்தான். எந்த கட்சியில் இருந்தாலும், எதிர்கட்சியில் இருந்தாலும் சகோதரர்கள்தான் "I am truly believe India plurality makes unique when comes to national importance will be sacrifice little different". தேசத்திற்காக நாம் அனைவரும் ஒரே மேடையில் அமர வேண்டும். அதுதான் என்னுடைய அரசியல்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:“போதைப்பொருள் அதிகமாக இருப்பது குஜராத்தில்தான்”.. அமைச்சர் ரகுபதி தாக்கு!