சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் வழியாக( இரவு 10 மணி அளவில்) அவர் அமெரிக்கா புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
தமது 17 நாட்கள் அமெரிக்க பயணத்துக்கு முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மு க ஸ்டாலின் கூறுகையில்,,"அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறேன். தமிழ்நாட்டிற்காண தொழில் முதலீட்டுகளை ஈர்த்துவிட்டு வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி சென்னை வர திட்டமிட்டு இருக்கிறேன். முதலீடுகளை ஈர்ப்பதற்காக இதுபோன்ற பயன்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன்.
ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டதன் மூலம் தமிழ்நாட்டுக்கு பல முதலீடுகள் வந்துள்ளதன. மேலும் 18,521 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கக் கூடிய வகையில், 10 ஆயிரத்து 882 கோடி மதிப்பிலான 17 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன.990 கோடிக்கான முதலீட்டு திட்டங்களில் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூரைச் சேர்ந்த
ஐ பி நிறுவனத்தின் திட்டத்தையும், ஓமராய் நிறுவனத்தின் திட்டத்தையும் தொடங்கி வைத்தேன் இந்த இரண்டு நிறுவனங்களின் திட்டத்தின் மூலம் 1538 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 3796 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்களின் கட்டுமான பணிகள் பல்வேறு முன்னேற்ற நிலைகளில் உள்ளன.
இதேபோல் ஜப்பான் நாட்டின் நிறுவனங்களை அமைக்க அடிக்கல் நாட்டி உள்ளேன். 3540 கோடி மதிப்புடைய மூன்று திட்டங்கள் முன்னேற்ற நிலைகளில் உள்ளன. 438 கோடி மதிப்பிலான இரண்டு விரிவாக்க திட்டங்கள் விரைவில் செயல்படுத்த கூடிய நிலையில் உள்ளன. 2100 கோடி மதிப்பிலான நான்கு திட்டங்களில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளது.
நாங்கள் கையெழுத்திட்ட அனைத்து திட்டங்களும் துரிதமாக செயல்பட்டு வருவதாக ஆதாரப்பூர்வமாக சுட்டிக் காட்டதான் விரிவாக இங்கே குறிப்பிட்டுள்ளேன். எனவே இதுபோன்ற பயணங்கள் மிக மிக முக்கியமானது. திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்று மூன்று ஆண்டு காலங்களில் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன. இதன் மொத்த மதிப்பு 9 லட்சத்து 99 ஆயிரத்து 93 கோடி ரூபாய் ஆகுமந். இதன் மூலம் 18 லட்சத்து 83 ஆயிரத்து 234 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதில் 234 திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதன் மூலம் 4 லட்சத்து 16 ஆயிரத்து 717 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மற்ற ஒப்பந்தங்களும் படிப்படியாக செயல்பாட்டிற்கு வரும்.