சென்னை: நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் தேசிய அளவில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த நிலையில், பிரதான எதிர்கட்சியான அதிமுக முதல் பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளனர்.
டெபாசிட் இழப்பு என்றால் என்ன? இந்தியாவில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 1951-இன் படி மக்களவை அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். இதன் அடிப்படையில், மக்களவைத் தேர்தலில் பட்டியலின, பழங்குடியின வேட்பாளர்கள் 12,500 ரூபாய் வைப்புத் தொகையாக தேர்தல் ஆணையத்தில் செலுத்த வேண்டும்.