திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே அமைந்துள்ளது ஏர்வாடி. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான இங்கு ஆண்டுதோறும் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக கொண்டாப்படும். 800 ஆண்டு பாரம்பரியம் மிக்க இந்த பண்டிகை கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறவில்லை. நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று (17/07/2024) நடைபெற்ற சந்தனக் கூடு திருவிழா பழைய ஆர்ப்பாட்டம் இல்லை என்றாலும், செண்டை மேளங்களுடன் நடைபெற்றது.
இந்த பாரம்பரிய திருவிழாவை மீட்டெடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்த ஹசன் ஹுசைன் முஹர்ரம் கமிட்டியின் தலைவர் தமீம் சிந்தாமதார் கூறுகையில், இப்பகுதியில் நடைபெறும் முஹர்ரம் பண்டிகை 800 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது. இப்பகுதியில், 'ஹசன்' என்ற பெயரில் ஒரு தர்காவும், 'ஹூசைன்' என்ற பெயரில் ஒரு தர்காவும் உள்ளன. மொஹரம் பண்டிகை தினத்தன்று மாலை இந்த இரு தர்காக்களில் இருந்தும் சந்தனக்கூடு தெருக்களில் வீதி உலாவாக கொண்டு சென்று, இறுதியில் இரு சந்தனக்கூடும் ஒரு இடத்தில் நேருக்கு நேர் சந்திக்கும். பின்னர், ஊருக்கு வெளியே உள்ள கால்வாய் தண்ணீரில் சந்தனக்கூட்டில் உள்ள சில காகிதங்களை கரைப்பார்கள்.
இஸ்லாமியர்களும் மற்று சமூக மக்களும் சாதி, மத வேறுபாடு இன்றி அனைவரும் சகோதரர்களாக இணைந்து இந்த திருவிழாவை கொண்டாடுவோம். ஆனால், கடந்த 2013ஆம் அண்டு ஜாக் அமைப்பினர் இது இஸ்லாமிய கலாச்சரத்தை சார்ந்த பண்டிகை இல்லை என்றும், முழுக்க முழுக்க இந்து மத கலாச்சாரத்தைக் கொண்டது எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் சமயத்தில் சடங்குகள் செய்யும் போது அடிதடி தகராறு செய்து, இதனை சட்ட ஒழுங்கு பிரச்னையாக மாற்றி தடைவிதிக்க வழிவகை செய்தனர். பொதுவாக இந்த திருவிழாவிற்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள். யாருக்கும் இடையூறாகவோ, எந்த பிரச்னையும் இல்லாமல் நடைபெற்று வந்தது. தற்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் முஹர்ரம் திருவிழாவிற்கு இப்பகுதி மக்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர்" எனக் கூறினார்.
800 வருட பாரம்பரியம் தடைபட்டது எப்படி?பொதுவாக சந்தனக்கூடு திருவிழாவின் போது, ஏர்வாடி பகுதி முழுவதும் மக்கள் மத்தியில் திருவிழாக்கோலம் களைகட்டி இருக்கும். ஒருபுறம் சந்தனக்கூடு ஊர்வலம், மறுபுறம் தெருக்களில் ஆங்காங்கே ஏராளமான கடைகள் போடப்பட்டிருக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட பிரச்னையை காரணம் காட்டி ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா நடைபெற காவல்துறை தடை விதித்தது.