லி.மலையூர் கிராம வாக்காளர்களுக்காக குதிரை மூலம் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திண்டுக்கல்: தமிழ்நாட்டில் நாளை நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வாக்குப்பதிவிற்காக தமிழ்நாட்டில் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் தமிழ்நாட்டில் அர்சியல் கட்சிகள் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், இன்று அந்தந்த தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது.
நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி நத்தம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட லி.மலையூர் என்ற மலைக்கிராமத்திற்கு வாக்கு பெட்டிகள் எடுத்து செல்லப்பட்டது.
அலங்காநல்லூர் செல்லும் சாலையில் உள்ள மலையடிவாரப் பகுதியான எல்லைப்பாறையிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் லிங்கவாடி ஊராட்சியைச் சேர்ந்த மலைக்கிராமமான லிங்கவாடி.மலையூர் உள்ளது. இங்கு 237 ஆண் வாக்காளர்கள் பேர், 249 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 486 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு பெட்டி மற்றும் எழுது பொருட்கள் போன்றவற்றை மண்டல அலுவலர் கணேஷ் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புடன் அடிவார பகுதியிலிருந்து குதிரையில் பொருட்களை ஏற்றி வாக்குச்சாவடி மையத்திற்கு நடந்தே எடுத்து சென்று சேர்ந்தனர்.
இதையும் படிங்க:"நேற்று பட்டுவாடா.. இன்று வசூலா?" - டாஸ்மாக் கடைக்குள் நுழைந்த திலகபாமா - நடந்தது என்ன? - Lok Sabha Election 2024