தமிழ்நாடு

tamil nadu

மதுரையில் பள்ளி மாணவனைச் சுற்றிவளைத்து சக மாணவர்கள் தாக்குதல்.. போலீசார் விசாரணை! - madurai school student attack

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 10:23 PM IST

Madurai school student attack: மதுரை பேருந்து நிலையத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பள்ளி மாணவர்கள் தாக்குதல் புகைப்படம்
பள்ளி மாணவர்கள் தாக்குதல் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: மதுரை மாநகரிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கிடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியார் பேருந்து நிலையத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மதுரை மாநகர் வைகை ஆற்றுப் பகுதியில் உள்ள கல் பாலத்தில் நேற்றிரவு பள்ளி மாணவர் ஒருவரை 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் சரமாரியாக தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ மூலம் செல்லூர் பகுதியில் இருந்த மாணவரை அழைத்து வந்து ஆற்றுப் பகுதியில் வைத்து சரமரியாக தாக்கியதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த வீடியோ காட்சியை அடிப்படையாகக் கொண்டு செல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலியைத் தொடர்ந்து மதுரையிலும் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்படும் மோதல் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இந்த விவகாரம் சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, நேற்று சேலம் எடப்பாடியிலும் பள்ளி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஏர்வாடியில் இசையுடன் சந்தனக்கூடு ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி! - Ervadi Muharram festival

ABOUT THE AUTHOR

...view details