வேலூர்: வேலூர் மாவட்டம் விருதம்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்த வருபவர் அருண் கண்மணி. கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி மதுபோதையில் குடியாத்தம் நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கே.வி. குப்பம் பேருந்து நிலையம் அருகே எதிரே சென்ற தனியாருக்கு சொந்தமான ஷூ கம்பெனி மினி வேனை மடக்கி பிடித்து, ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும், அருகில் இருந்த கே.வி.குப்பம் காவல் நிலையத்திற்கு ஓட்டுநரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருந்த போலீசார் அருண் கண்மணி முழு போதையில் இருப்பதைக் கண்டு அவரை கண்டித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்து அருண் கண்மணி தன்னுடைய உடைகளை கழற்றி வீசிவிட்டு போலீசாரையும், ஆபாச வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரை பிடித்து சென்ற போலீசார், கே.வி.குப்பம் அவரை அடைத்து வைத்தனர்.
அங்கு நிர்வாணமாக நின்று கொண்டு, தகாத வார்த்தைகளில் போலீசாரை திட்டி உள்ளார். அருண் கண்மணி ஆடை இல்லாமல் உள்ளதை கண்டு பெண் காவலர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அதன்பின்பு போலீசார் அவர் மீது மதுபோதையில் இருந்ததற்கான வழக்கு போடுவதற்காக குடியாத்தம் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.