தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுள் தண்டனை கைதி?: சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு! - Jail Officials Use Prisoner Case

Jail Officials Use Prisoner Case: ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு சிறைத்துறை அதிகாரிகள் பயன்படுத்தியது குறித்து சிபிசிஐடி விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப் படம்
சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2024, 9:01 PM IST

சென்னை:கிருஷ்ணகிரியை சேர்ந்த கலாவதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், 'கொலை குற்றத்திற்காக தனது மகன் சிவக்குமார் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை சிறைத்துறை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு உபயோகப்படுத்துவதாகவும், காவல் அதிகாரி வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டி கடுமையாக தாக்கி கொடுமைhdபடுத்தியுள்ளதாகவும், இதில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியம், சிவஞானம் அமர்வு நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறைக் கைதியை சட்டவிரோதமாக வீட்டு வேலைகளை செய்ய பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், தவறு செய்த அதிகாரிகள் மீது விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் மீது விசாரணை நடத்த காவல்துறை இயக்குநர் உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட சிவக்குமாருக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். சிவக்குமாரை வேலூர் மத்திய சிறையில் இருந்து சேலம் சிறைக்கு உடனடியாக மாற்ற காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றினால் என்ன தவறு? - நீதிமன்றத்தில் அதிமுக தரப்பு வாதம்!

ABOUT THE AUTHOR

...view details