வேலூர்:பட்டாவுக்காக நிலத்தை அளக்க வேண்டும் என பெண் ஒருவர் கிராம நிர்வாக அலுவலரை (விஏஓ) அணுகியுள்ளார். இதற்காக கிராம நிர்வாக அலுவலர் ரூ.5,000 லஞ்சம் கேட்டு, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.
வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தனக்குச் சொந்தமான இடத்தின் பட்டாவுக்காக, அதை அளக்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது இடத்தை அளந்து கொடுப்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் ஷர்மிளா, ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத பெண், இது குறித்து வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்துடன் கிராம நிர்வாக அலுவலரை அந்த பெண் சந்திக்கச் சென்றுள்ளார். அலுவலகத்தில் ஷர்மிளா இருக்கைக்கு அருகே சென்று, கையில் ரசாயனம் தடவி வைத்திருந்த லஞ்ச பணத்தைக் கொடுத்துள்ளார்.