ராணிப்பேட்டை:அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரத்தில் இந்திய கடற்படை விமான தளம் இயங்கி வருகிறது . இந்த வளாகத்தில் கழிவுநீர் (செப்டிக் டேங்க்) லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. இதனால் பழுதாகி நின்ற கழிவு நீர் லாரியை கயிறு கட்டி இன்னொரு லாரி இழுத்துக் கொண்டு வந்தது.
இந்த லாரிகள் அரக்கோணம் - காஞ்சிபுரம் சாலையில் வெங்கடேசபுரத்தில் உள்ள பாலத்தில் சென்று கொண்டும் இருக்கும் போது திடீரென லாரிகளுக்கு இடையான கயிறு அறுந்துள்ளது .இதில் நிலை தடுமாறி எதிரே வந்த ஷேர் ஆட்டோ மீது லாரி வேகமாக மோதியது.
இந்த வேகத்தில் ஆட்டோ பின்னோக்கி செல்ல, பின்னால் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் ஆகிய வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த திருவள்ளூர் மாவட்டம் திருவாலாங்காட்டைச் சேர்ந்த மகேந்திரன் (58), அவரது மனைவி விமலா (35), ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த திருவாலங்காடு பார்த்தசாரதி (48), ஆட்டோ டிரைவர் அரக்கோணம் அம்மனூர் ரவி ஆகிய 4 பேர் படு காயமடைந்தனர். இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.