தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

”ஆதவ் அர்ஜுனாவின் கருத்து ஏற்புடையதல்ல" - வன்னி அரசு ஓப்பன் டாக்! - vanni arasu about aadhav arjuna - VANNI ARASU ABOUT AADHAV ARJUNA

வடமாவட்டங்களில் விசிக இல்லாமல் திமுக வெல்ல முடியாது என ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்து ஏற்புடையதல்ல; அவர் தனிப்பட்ட முறையில் இக்கருத்தை தெரிவித்திருக்கலாம் என விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

வன்னி அரசு
வன்னி அரசு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 24, 2024, 8:17 PM IST

சென்னை : சென்னையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரமும், நிதியும் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி சிபிஐ-எம் உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெற்றது. இதில், விசிக சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருக்கிறோம், இடதுசாரிகள் இருக்கிறார்கள், மதிமுக இருக்கிறார்கள். இந்த கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து 2021ம் ஆண்டு தேர்தலை சந்தித்த காரணம் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம்தான்.

பாஜக மதவாத மற்றும் மக்கள் விரோத கட்சி. இப்படிப்பட்ட கட்சி மற்ற வட மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துக் கொண்டிருக்கிற சூழலில், தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சியைப் பிடித்தால் தமிழ்நாட்டினுடைய ஒட்டு மொத்தமான மக்களுக்கு எதிராக செயல்படுவார்கள். ஆகவே அவர்களை வீழ்த்த வேண்டும் என்கின்ற ஒற்றை நோக்கத்துடன் இந்த கூட்டணியில் சேர்ந்தோம். 6 தொகுதியை கொடுத்தாலும் இடங்கள் முக்கியமல்ல இலக்கு தான் முக்கியம் என்று சேர்ந்தோம்.

வன்னி அரசு பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:"உதயநிதி அப்படி சொன்னது தப்பு!" தேர்தல் முடிவை தீர்மானிப்பது வி.சி.க. தான் என்கிறார் ஆதவ் அர்ஜுனா - Aadhav Arjuna

விசிக வெற்றி பெற்று இருக்கிறோம் என்றால் வெறும் திமுகவின் வாக்கு மட்டுமல்லாது கூட்டணி கட்சிகளின் வாக்குகள் சேர்ந்துதான் வெற்றி பெற்று இருக்கிறோம். இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். நாங்கள் இல்லாமல் வெற்றி பெற முடியாது என்று சொல்வது கூட்டு புரிந்துணர்வு முயற்சி பின்னடைவாக தான் பார்க்க முடியும்.

ஒரு கூட்டாக சேர்ந்து கூட்டணியை புரிந்துணர்வு செய்து வாக்கை பெற்று இருக்கிறோம். ஆகவே விடுதலை சிறுத்தைகளின் வெற்றிலும் இடதுசாரிகளின் பங்கு இருக்கிறது. திமுகவின் வெற்றியில் விசிகவின் பங்கு இருக்கிறது, இடதுசாரியின் பங்கும் இருக்கிறது, காங்கிரஸ் பங்கும் இருக்கிறது. அந்தந்த கட்சிகளின் வாக்குகள் அடிப்படையில் அவர்களின் பங்களிப்பை நாங்கள் மதிக்கிறோம். இந்த வெற்றி என்பது எல்லோரும் சேர்ந்து எடுத்த வெற்றியாக தான் பார்க்கிறோம்.

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்து எங்களின் கட்சி ஆரம்பித்ததின் இலக்கு என்பது எங்களின் கட்சியை அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்கும் எங்களின் தலைவர் முதல்வராக வரவேண்டும் என்ற அடிப்படையில் தான் கட்சி ஆரம்பித்துள்ளோம். அந்த அடிப்படையில் தான் இந்த கருத்தும் சொல்லப்பட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்போதும் தனி நபர்களை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ளாது. தனி நபர்களை விமர்சிப்பதை ஆதரிக்கவும் செய்யாது. அது அவரின் தனிப்பட்ட கருத்து. விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவின் தலைமையிலான கூட்டணியில் தான் தொடர்கிறோம். எங்களின் தலைவர் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். ஆகவே இதற்கு மேல் இந்த விவாதத்தை தொடர விரும்பவில்லை.

வட மாவட்டங்களில் விசிக இல்லாமல் திமுக வெல்ல முடியாது என விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்து ஏற்புடையதல்ல என்று விசிக சொல்கிறோம். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது கட்சியின் கோட்பாடு, நிலைபாடு. அதில், எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. கூடுதலாக சொல்கின்ற கருத்து தனிப்பட்ட முறையில் தெரிவித்து இருக்கலாம் " என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details