திருப்பத்தூர்:வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வரும் நிலையில், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, இந்திரா நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் அங்கன் மையத்தில் மழைநீர் ஒழுகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த அங்கன்வாடி மைய கட்டடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாகவும் குழந்தைகளை கோணிப்பையில் அமர வைத்து பாடம் கற்பித்து வருவதாகவும் குழந்தைகளின் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளின் பெற்றோர்கள் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:அதிகரிக்கும் நீர்வரத்து; செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த துணை முதல்வர்!
மேலும் பழைய அங்கன்வாடி மையத்திற்கு அருகிலேயே புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் இன்னும் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை திறக்கவில்லை. இதனால் தங்களது குழந்தைகளை உயிர்பயத்துடன் அங்கன்வாடி மையத்திறகு அனுப்பும் நிலையில் உள்ளது. எனவே அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர்கள் அரசு கோரிக்கை வைக்கின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்