தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்; நாடாளுமன்றத் தொகுதிகளில் 3 நாட்கள் திமுக பரப்புரைக் கூட்டம்!

DMK election campaign: மக்களவைத் தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் 'உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் பிரச்சாரத்தை நடத்தவுள்ளது என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக தேர்தல் பரப்புரை
திமுக தேர்தல் பரப்புரை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 4:23 PM IST

சென்னை:நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வரும் நிலையில், திமுக வருகிற பிப்ரவரி 16, 17 மற்றும் 18ஆம் தேதிகளில், தமிழகம் முழுவதும் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் 'உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அதிமுக அரசின் பத்தாண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், துன்பங்களை நேரடியாக கேட்டறிந்திட திமுக முன்னணியினர் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரையில் பங்கேற்று, அதிமுகவை மக்கள் நிராகரிப்பதற்கான அடித்தளமிட்டனர்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் 2024-இல், கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்பொழுது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக, திமுக முன்னணியினர் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்களில் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனர்.

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க திமுக தலைவரின் குரலாக, பிப்ரவரி 16, 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் நடைபெறும் பரப்புரைக் கூட்டங்களை, பொறுப்பு அமைச்சர்களுடன் இணைந்து, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், பகுதி-ஒன்றிய-நகர-பேரூர் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், பூத் கமிட்டியினர் ஆகியோர் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டங்களாக நடத்திட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தேமுதிக கொடி நாள்; கேப்டன் நினைவேந்தல் நடத்த பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details