சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த காரைக்காடு பகுதியில் தமிழ்நாடு காவல் துறையினரின் சோதனை சாவடி அமைந்துள்ளது. அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பாலாறு அடுத்த பகுதியில் கர்நாடக அரசின் சோதனைச் சாவடி இருக்கிறது. தமிழக எல்லைப் பகுதியான காரைக்காடு சோதனை சாவடியை கடந்து கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் காவல்துறையினர் சோதனை செய்து அனுப்புவது வழக்கம்.
இந்த நிலையில், இன்று வடமாநில சுற்றுலா பேருந்து ஒன்று சேலம் மேட்டூர் அணை அடுத்த கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மாதேஸ்வர மலைக்கு சென்றது. அப்போது, காரைக்காடு பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு செக் போஸ்ட் பகுதியில் அங்குள்ள காவலர் சுற்றுலா பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே பேருந்தில் மது போதையில் இருந்த வட மாநிலத்தவர் காவலரை சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பேருந்தைச் சுற்றி வளைத்து பிடித்து காவலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யபிரியா கொல்லப்பட்ட வழக்கு...இளைஞர் சதீஷ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு!