தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா பல்கலை - ஐநா நடத்திய குழந்தைகள் உரிமைகள் குறித்த கருத்தரங்கம்; அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு! - Unicef conference - UNICEF CONFERENCE

Unicef conference at Anna University: ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊடக அறிவியல் துறையும் இணைந்து 'குழந்தைகள் உரிமைகளைப் பரப்புவதில் அரசியல் கட்சிகளின் பங்கு' எனும் தலைப்பில் நடத்திய கருத்தரங்கில், அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

குழந்தைகள் உரிமைகள் குறித்த கருத்தரங்கம்
குழந்தைகள் உரிமைகள் குறித்த கருத்தரங்கம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 10:58 PM IST

சென்னை: ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பும், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊடக அறிவியல் துறையும் இணைந்து தமிழ்நாட்டில் முதல் முறையாக அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுடன் 'குழந்தைகள் உரிமைகளைப் பரப்புவதில் அரசியல் கட்சிகளின் பங்கு' எனும் தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கு நடத்தியது.

இதில் ஆளும் கூட்டணி கட்சிகள் பிரதிநிதிகளும், எதிர்க்கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அப்போது, குழந்தைகள் உரிமைகளை நிலைநாட்டிட உறுதி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறுகையில், "குழந்தைகளுக்கு தங்கள் கருத்துகளை வெளிபடுத்தவும், தன்னிச்சையாக முடிவெடுக்கவும் குழந்தைகள் உரிமைகள் வழி வகுகிக்கிறது. குழந்தைகள் வினா எழுப்புவதை ஊக்குவிப்பதும் அதற்கான சூழல்களை ஏற்படுத்தித் தருவதும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியரின் கடமை" எனக் கூறினார்.

மேலும், "முன்னேற்றதிற்கு அரசியல் விருப்பம் அடிப்படைக் காரணம், தமிழ்நாட்டில் அது அதிகம் இருக்கிறது. அரசியல் கட்சிகளுடன் இணைந்து குழந்தைகள் உரிமைகளை நிலைநாட்டுவதோடு குழந்தைகள் நல்ல எதிர்காலத்தை அடைவதற்கு நிறைய முன்னேற்றங்கள் செய்ய அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது முக்கியம்" என ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரளா அலுவலகத் தலைவர் கே.எல்.ராவ் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய திமுக வின் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், "அரசியல் கட்சிகளின் உதவியுடன் குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்ய ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பு முனைப்பு காட்டுகிறது. உரிமைகளைத் தொடர்ந்து உறுதி செய்யும் போது குழந்தைகள் முழுத் திறன்களை அடைவதோடு, எல்லோருக்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும்.

அது மட்டுமல்லாமல், குழந்தைகள் உரிமைகள் முன்னிலைப் படுத்துவதும், பாதுகாப்பதும் சம உரிமைகள் மாண்பு குறித்தான நமது கூட்டு மதிப்புகள் பிரதிபலிக்கும் குழந்தைகள் உரிமைகளை நிலைநாட்டுவதும், பாதுகாப்பதும் அரசுகள் சமூகங்கள் மற்றும் தனி நபர்கள் என அனைவரின் கடமையாகும்.

குழந்தைகள் உரிமைகள் குறித்து குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத் தேவை இருப்பதால் பள்ளி பாடத்திட்டத்தில் குழந்தைகள் உரிமை சேர்க்க வேண்டும் எனும் கோரிக்கையை அரசிடம் பரிந்துரைக்கப்படும்" என தெரிவித்தார். மேலும், "முன்னேற்றத்திற்கான கொள்கை உரையாடலில் குழந்தைகளை முன்னிலைப் படுத்தும் போது பெற்றோர்களின் கருத்துகளை கேட்க வேண்டும்" என அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் அப்சரா ரெட்டி கூறினார்.

பாஜகவின் தொழில்நுட்ப அணியின் செயலாளர் பிரதீப், "பெண்கள் மற்றும் குழந்தைகளின் குறித்தான திட்டங்கள் மற்றும் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார். பின்னர், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊடக அறிவியல் துறை தலைவர் முனைவர் சி.அருள்செல்வன் கூறும் போது, "அண்ணா பல்கலைக்கழகத்தின் ஊடக அறிவியல் துறையும், ஐநாவின் குழந்தைகள் நல அமைப்புடன் சேர்ந்து குழந்தைகள் உரிமைகள் பாதுக்காக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் குழு ஒன்று அமைக்கப்படும்" என தெரிவித்தார்.

சிபிஐஎம் கட்சியைச் சேர்ந்த ஆறுமுக நயனார் நர்மதா, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ராஜசேகர், ஆசைத்தம்பி, மதிமுக பாவலன், விசிக செய்தித் தொடர்பாளர் வசீகரன், ஆம் ஆத்மி கட்சித் மாநிலத் தலைவர், இந்தியன் யூனியன் லீக் கட்சியைச் சார்ந்த கமில் உள்ளிட்ட பலர் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:முதலும் முடிவுமாக உள்ள இந்திய மூவர்ணக்கொடி.. சென்னை கோட்டை தாங்கியிருக்கும் வரலாற்றுச்சுவடு!

ABOUT THE AUTHOR

...view details