தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் உதயநிதி ஸ்டாலின்.. விளையாட்டு வீரர்களுக்கு சொன்ன நற்செய்தி!

தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான மூன்று சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில், விரைவில் முதற்கட்டமாக 100 வீரர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட உள்ளது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 11 hours ago

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

சேலம்:தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேரு கலையரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கூட்டுறவுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மின்சாரத்துறை, வேளாண்மை – உழவர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 3,583 பயனாளிகளுக்கு ரூ.33.26 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதையும் படிங்க :"நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இருக்காது" - சீமான் பேச்சு!

பின்னர் பேசிய அவர், "ரூ.86 கோடி மதிப்பீட்டில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் 26 மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு இங்கு சேலத்தில் நடைபெற்று வருகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது ஒரு மணி நேரமாவது பேட்மிண்டன் விளையாடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.

மேலும், பல நூறு விளையாட்டுகளை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தான் முதலமைச்சர் கோப்பை போட்டி துவங்கப்பட்டுள்ளது. 36 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு 6 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு 11 லட்சம் பேர் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் 38 மாவட்டங்களில் கடந்த ஆண்டு சேலம் மாவட்டம் 19வது இடத்தில் இருந்த நிலையில் விளையாட்டு வீரர்களின் உழைப்பால் சேலம் மாவட்டம் தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. நாமக்கல் மாவட்டம் 13வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

முறையான பயிற்சி செய்து விளையாடினால் முதல் இடத்திற்கு முன்னேறலாம். தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான மூன்று சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில், விரைவில் முதற்கட்டமாக 100 வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க உள்ளது” என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details