தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆதார் அட்டையுடன் கோவை ஆடை நிறுவனத்தில் வேலை.. வங்கதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது! - Bangladeshis Arrested in Coimbatore

Illegally Staying 2 Bangladeshis Arrested: கோவை அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்து தனியார் தொழிற்சாலையில் டெய்லராக பணியாற்றி வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Photo of arrested Bangladeshi youths
கைது செய்யப்பட்ட வங்கதேச இளைஞர்களின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 1:20 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், அன்னூர் அருகே செயல்படும் தொழிற்சாலைகள் மற்றும் ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்களில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர் சட்ட விரோதமாக தங்கியிருந்து பணிபுரிவதாக தகவல்கள் வெளியானது.

அதன் தொடர்ச்சியாக, தொழிற்சாலைகள் மற்றும் ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர்கள் குறித்த உரிய ஆவணங்களை தொழிற்சாலை நிர்வாகம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், போலீசார் அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, மாணிக்கம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 26 வயதுடைய முகமது அர்ஜு மற்றும் 28 வயதுடைய போலாஸ் பர்மன் ஆகிய இருவரும் உரிய ஆவணங்கள் இன்றி, சட்டவிரோதமாக தங்கியிருந்து பணிபுரிந்தது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து, அந்த இளைஞர்கள் இருவரையும், போலீசார் அன்னூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த முதற்கட்ட விசாரணையில், முகமது அர்ஜு மற்றும் போலாஸ் பர்மன் ஆகிய இருவரும் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், இவர்கள் இருவரில் முகமது அர்ஜு என்பவர், கடந்த 2012ஆம் ஆண்டு சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவி, திருப்பூரில் டெய்லராக பணிபுரிந்து வந்ததுடன், ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று, 2023ஆம் ஆண்டு முதல் அன்னூர் பகுதியில் பணிபுரிந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, பாஸ்போர்ட் சட்டம் 146வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதோடு, பிடிபட்ட இருவரிடம் அடுத்தகட்ட விசாரணையை போலீசார் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கடந்த ஒரே ஆண்டில் 440 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்.. சென்னை விமான நிலையம் வெளியிட்ட அதிர்ச்சி தரவுகள்!

ABOUT THE AUTHOR

...view details