திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல் வணக்கம்பாடி கிராமத்தில், விநாயகர் வேல் முருகர் சிவபெருமான் அம்மன் நந்தியம் பெருமானுக்கு, ஊர் பொதுமக்கள் சார்பாக மகா கும்பாபிஷேக விழா நேற்று (மே 3) விமர்சையாக நடத்தப்பட்டது. இதையடுத்து விழா நிறைவடைந்த நிலையில், இன்று (மே 4) திருவிழாவிற்காக கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சாமி உருவம் பதிக்கப்பட்ட அலங்கார விளக்குகளை அகற்றும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது விளக்குகளை அகற்றிக் கொண்டிருந்த மேல் வணக்கம்பாடி காலனி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் மேல் வணக்கம்பாடி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் ஐயப்பன் ஆகிய இரு இளைஞர்கள் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில், இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இந்நிலையில், அருகில் இருந்த கிராம மக்கள், உடனடியாக இருவரையும் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.