நீலகிரி:நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள கேத்தி அரக்காடு பகுதியில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஜோசப் ராய், அவரது மனைவி மற்றும் தன்வி (3), மன்வி (2) ஆகிய இரு குழந்தைகளுடன் ஒரு வருடமாக ஊட்டி கவர்னர் சோலை பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் மற்றும் இவரது மனைவி சேர்ந்து கேத்தி அரக்காடு பகுதியில் உள்ள காளான் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஜோசப் ராய் மற்றும் அவரது மனைவி காளான் கம்பெனியில் பணியில் இருந்த போது, அவரது இரண்டு குழந்தைகளும் மாலை 4 மணியளவில் காளான் பண்ணைக்கு அருகில் உள்ள இடத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, மகள் மின்வி குட்டை தண்ணீரில் விழுந்துள்ளார். அதனைப் பார்த்த மற்றொரு குழந்தை தன்வி அழுது கொண்டிருக்கும் சத்தம் கேட்டதால், பெற்றோர் மற்றும் அங்கு பணியாற்றியவர்கள் வெளியில் வந்து பார்த்துள்ளனர். அப்போது மன்வி தண்ணீரில் மிதந்தவாறு கிடந்துள்ளார்.