விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த கிளியனூர் பழைய கொஞ்சிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயபால் மகள் நர்மதா (17), தாஸ் மகள் அனுஸ்ரீ (16). இதில் நர்மதா அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பும், அனுஸ்ரீ 11 ஆம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில், மாணவிகள் இருவரும் நேற்று அதே பகுதியில் உள்ள ஏரியில் குளித்துவிட்டு, பின்னர் கலங்களை பார்ப்பதற்காகச் சென்றனர். அப்போது இருவரும் அதில் தவறி விழுந்தனர். கலங்கலில் தண்ணீர் அதிகமாகச் சென்றதால் இருவரும் நீரில் மூழ்கினர். அருகில் இருந்தவர்கள் முதற்கட்டமாக நர்மதாவை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அனுஸ்ரீ உடல் கிடைக்காத நிலையில், வானூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் கிராம பொதுமக்கள் தீவிரமாக தேடி வந்தனர்.
ராமதாஸ் கோரிக்கை
இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் சமூக வலைத்தளத்தில், '' விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த வானூர் கொஞ்சிமங்கலம் ஒடையில் குளிக்கச் சென்ற நர்மதா என்ற 12-ஆம் வகுப்பு மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.