திருநெல்வேலி: திசையன்விளை அருகே உள்ள புலிமான் குளத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் 13 பேர் காரில் புலிமான் குளத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு தனது தந்தைக்கு திதி கொடுப்பதற்காக சென்றனர். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தோட்டவிளை பகுதியில், கன்னியாகுமரியில் இருந்து உவரி நோக்கிச் சென்ற ஸ்கார்பியோ காருடன் 13 பேர் பயணித்த கார் நேருக்கு நேர் மோதியது. இதில் 13 பேர் பயணித்த காரில் புலிமான் குளத்தைச் சேர்ந்த சந்தான குமாரி(38), முத்துச்செல்வி(32) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
நெல்லை கார் விபத்தில் 2 பேர் பலி: தந்தைக்கு திதி கொடுக்க சென்ற போது உயிரிழந்த சோகம்! - Tirunelveli Car accident - TIRUNELVELI CAR ACCIDENT
Tiruneveli Car accident: திருநெல்வேலி கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், 11 பேர் காயமடைந்தனர்.
Published : May 22, 2024, 12:30 PM IST
மேலும் இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்து, கூடங்குளம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்றனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 4 ஆண்டுகளில் 240 கொலைகள்! கொலை நகரமாக மாறுகிறதா நெல்லை? - ஆர்டிஐ-யில் அதிர்ச்சி தகவல் - RTI About Tirunelveli Murder Cases