தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முக சுந்தரம் மகன் கார்த்திக்குமார் (40) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு (மே 24) தனது வீட்டின் அருகில் நிறுத்தியுள்ளார்.
அதன் பின்பு, கார்த்திக்குமார் சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும்போது, அவர் நிறுத்திய இடத்தில் அவரது இருசக்கர வாகனம் காணாமல் போனது. இதனை அடுத்து தனது இருசக்கர வாகனம் திருடப்பட்டுள்ளதை அறிந்த கார்த்திக்குமார் இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், கார்த்திக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின்போது, தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் பகுதியில் உள்ள டி.சவேரியார்புரம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் பாஸ்கர் (23) மற்றும் தாளமுத்துநகர், பூபல்ராயர்புரம் பகுதியில் உள்ள சோட்டையன்தோப்பு பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவரது மகன் செல்வம் (24) ஆகியோர்தான் கார்த்திக்குமாரின் இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து, எப்போதும்வென்றான் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சந்திரசேகர பாண்டியன் பாஸ்கர் மற்றும் செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து திருடப்பட்ட ரூ.75,000 மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டு தொடர்பாக எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆம்பூர் கார் விபத்து: திருப்பதியில் இருந்து வீடு திரும்பும் போது நடந்த சோகம்.. காரில் இருந்த 9 பேரில் நிலை?