தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகனம் மோதி 2 வடமாநில கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.. கோவையில் நடந்தது என்ன? - coimbatore Students Death - COIMBATORE STUDENTS DEATH

North State Students Death: கோவையில் இயங்கி வரும் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த இரண்டு வடமாநில இளைஞர்கள், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Students Death
Students Death

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 6:00 PM IST

கோயம்புத்தூர்: கிணத்துக்கடவு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணத்துக்கடவு அருகே உள்ள கொண்டம்பட்டியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ருஷிகேஷ் மற்றும் ஜெய் இருவரும் பி.ஏ.எம்.எஸ்., இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் இன்று அதிகாலை நேரத்தில் டீ குடிப்பதற்காகப் பொள்ளாச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளனர்.

அங்கு டீ அருந்திவிட்டு கல்லூரிக்குத் திரும்பும் போது, அரசம்பாளையம் பிரிவு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், விபத்துக்குக் காரணமான அடையாளம் தெரியாத வாகனத்தைக் கண்காணிப்பு கேமரா வாயிலாகத் தேடி வருகின்றனர். மேலும், இது விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தபால் ஓட்டு கோரி மனு! - 108 Ambulance Workers

ABOUT THE AUTHOR

...view details