தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பற்றி எரிந்த காட்டுத்தீ.. பெரியகுளத்தைச் சேர்ந்த 2 விவசாயிகள் கைது! - theni farmers arrested - THENI FARMERS ARRESTED

Western Ghats Forest Fire: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் காட்டுத்தீ வைத்ததாக இரண்டு விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள வனத்துறையினர் அவர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Forest Fire
காட்டுத்தீ இருவர் கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 3:43 PM IST

தேனி:கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்னரே கடந்த சில வாரங்களாக கடும் வெயில் நிலவிவருகிறது. இதனால் வனப்பகுதியில் பசுமை குறைந்து செடிகள், கொடிகள், புற்கள், மரங்கள் ஆகியவை காய்ந்து கருகி வருகின்றன.

மேலும், கடும் வெயிலின் காரணமாகக் காய்ந்த சருகளில் தீப்பற்றி காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் ஏராளமான அரிய வகை மரங்களும், தாவரங்களும் தீயில் கருகி நாசமாகிவிடுகின்றன. இந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள முருகமலை வனப்பகுதியில், பாம்பார் காப்புக்காடு, தொண்டகத்தி உள்ளிட்ட பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகக் காட்டு தீ பற்றி எரிந்து வந்தது.

இதனைத் தொடர்ந்து, தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர், தீ தடுப்பு காவலர்கள் மற்றும் மலைக் கிராம இளைஞர்கள் என 25க்கும் மேற்பட்டோர் 2 நாட்களாகப் போராடி வனப்பகுதியில் காட்டுத் தீயை முற்றிலும் அணைத்தனர்.

இதனையடுத்து, தேவதானப்பட்டி வனத்தரக வனத்துறையினர், வனப்பகுதியில் காட்டு தீ பற்றியதற்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பெரியகுளம் அருகே உள்ள எ.புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி, முத்துச்சாமி ஆகிய இருவரும் தொண்டகத்தி பகுதியில் பட்டா நிலத்தில் விவசாயம் செய்து வரும் நிலையில் விவசாய கழிவுகளுக்கு தீ வைத்து எரித்துள்ளனர்.

அப்போது, எதிர்பாரதவிதாக தீயானது அருகில் உள்ள வனப்பகுதிக்குள் பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேவதானப்பட்டி வனச்சரக அலுவலகர்கள் விவசாயிகள் இருவர் மீதும் 1982ஆம் வருடத் தமிழ்நாடு வனச் சட்டம் 5/21கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

காட்டுத்தீ ஏற்படாமல் இருப்பதற்கு வனத்துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்களை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இது போன்ற அசம்பாவித சம்பவங்களில் சில விபத்துகள் ஏற்பட்டுவிடுகின்றன. எனவே, வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாய கழிவுப் பொருட்களை, தீ வைக்க முற்படும் பொழுது வனத்துறையினருக்கு உரிய தகவல் கொடுத்து அவர்கள் முன்னிலையில் தீ வைக்க வேண்டுமெனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையு படிங்க:"நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை பாரமாக கருதுகிறேன்"- துரை வைகோவின் அதிருப்திக்கு காரணம் என்ன? - Durai Vaiko

ABOUT THE AUTHOR

...view details