தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிக்கன் 65 இலவசமாக தர மறுத்த உரிமையாளார்கள்.. காரை மோதி அரங்கேற்றிய கொடூர செயல்! - hosur fast food shop issue

hosur fast food shop issue: ஓசூரில் இலவசமாக சிக்கன் 65 கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடையின் மீது காரை வைத்து மோதியதில், கொதிக்கும் எண்ணெய் கொட்டி கடை உரிமையாளர்களான கணவன், மனைவி பலத்த காயமடைந்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 3:10 PM IST

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர்கள் ராஜயோக்கியம் (54) மற்றும் விஜயா (48) தம்பதி. இவர்கள் பாரதிதாசன் நகரில், ரயில்வே சுரங்கப்பாதை அருகில் பாஸ்ட் புட் உணவகத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்றிரவு வழக்கம் போல கடையை நடத்தி வந்தனர். அப்போது குடிபோதையில் காரில் வந்த இருவர், பணம் கொடுக்காமல் இலவசமாக சிக்கன் 65 கேட்டு தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

ராஜயோக்கியம் இலவசமாக சிக்கன் 65 தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், காரை வேகமாக பின்னால் ஓட்டிச் சென்று கடையை இடித்ததில் சட்டியில் கொதிக்க கொதிக்க இருந்த எண்ணெய் கொட்டியதில் ராஜயோக்கியம், மனைவி விஜயா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

ராஜயோக்கியம் 72 சதவீதம் தீக்காயங்களுடன் கவலைக்கிடமாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயா 30 சதவீதம் தீக்காயங்களுடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஓசூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டதில்ம் காரை இயக்கி தகராறில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் சானசந்திரத்தைச் சேர்ந்த ஜாய்ஸ் ஆல்பர்ட் (28) மற்றும் நவதியைச் சேர்ந்த கார்மேகம் (38) ஆகியோர் எனத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீசார் இரண்டு இளைஞர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: காதல் திருமணம்.. 2 ஆண்டு கழித்து பழிதீர்த்த பெண் வீட்டார்.. ஓசூர் இளைஞர் கொலையில் அதிரும் பின்னணி!

ABOUT THE AUTHOR

...view details