தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக பட்டினி தினம்: விஜய் போட்ட உத்தரவு..! பட்டித்தொட்டி எங்கும் பசியைப் போக்க எடுத்த முடிவு..! - TVK Vijay - TVK VIJAY

TVK Vijay: மே 28ஆம் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் அறிவித்துள்ளார்.

TVK President Vijay
தவெக தலைவர் விஜய் (Credits - IANS)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 26, 2024, 10:33 AM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மே 28ம் தேதி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், 'வணக்கம். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலகப் பட்டினி தினமான, வருகிற 28.05.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மாவட்ட, அணி, நகரம், ஒன்றியம், கிளை, மற்றும் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றிப் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"ஒரு படத்தின் அனைத்து உரிமைகளும் தயாரிப்பாளருக்கேச் சொந்தம்" - சாமானியன் தயாரிப்பாளர் பேட்டி! - Saamaniyan

ABOUT THE AUTHOR

...view details