தேனி:தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்டமாக, ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என நான்கு முனைp போட்டி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால், அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் தேனி மக்களவை தொகுதி வேட்பாளராக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுth தாக்கல் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் மார்ச் 27ஆம் தேதியாகும். மனுth தாக்கலுக்கு நாளை ஒரு நாள் மட்டும் உள்ளதால், முக்கிய கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள், நேற்று முதலே வேட்பு மனுவை தாக்கல் செய்ய தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை சுயேட்சை, அதிமுக மற்றும் நாதக கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுth தாக்கல் செய்துள்ளனர். நாளை திமுக வேட்பாளர் தங்க தமிழ்sசெல்வன் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வேட்பு மனுவை தாக்கல் செய்கின்றனர். கடந்த தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வன், இந்த முறை திமுக சார்பாக போட்டியிடுகிறார்.
இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) காலை பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் டிடிவி தினகரன் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “14 ஆண்டுகள் ராமன் வனவாசம் சென்றது போல், சதியால் உங்களிடம் இருந்து பிரித்து விட்டார்கள். மீண்டும் உங்களைச் சந்திக்கும் வாய்ப்பை இறைவன் தந்திருக்கிறான். நான் பிறந்த ஊர் போல ஒவ்வொரு தெருவும் பெரியகுளம் எனக்கு பரிச்சயம். 14 ஆண்டுகள் வனவாசம் என்று ராமர் என்ற அவதார புருஷரோடு என்னை ஒப்பிடவில்லை. அந்த கால அளவைச் சொல்கிறேன்" என்று பிரச்சாரம் மேற்கொண்டார்.