தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு.. 17 காளைகளை அடக்கி நவல்பட்டு ரஞ்சித்குமார் முதல் பரிசு! - TRICHY SOORIYUR JALLIKATTU

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கிய நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமாருக்கு முதல் பரிசாக பைக் வழங்கப்பட்டுள்ளது.

சூரியூர் ஜல்லிக்கட்டு, முதல் பரிசு பெற்ற நபர்
சூரியூர் ஜல்லிக்கட்டு, முதல் பரிசு பெற்ற நபர் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2025, 9:08 PM IST

திருச்சி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இதில் முதல் பரிசை தட்டிச் சென்ற இளைஞருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் "2025'' இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் தமிழர் திருளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாளான இன்று (ஜன.15) சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 8 மணிக்கு துவங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழிக்கு பிறகு வருவாய் கோட்டாட்சியர் அருள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சூரியூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்ற ரஞ்சித் குமார் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்து கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4.50 மணியுடன் நிறைவடைந்தது.

ஏழு சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் மொத்தமாக 681 ஜல்லிக்கட்டு காளைகள் களம் கண்டன. மேலும், இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் போட்டியிலிருந்து நிராகரிக்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் 31, மாட்டின் உரிமையாளர்கள் 35, மாடுபிடி வீரர்கள் 15, கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் மற்றும் ஊர்க்காவல் படையினர் இரண்டு என மொத்தமாக 82 பேர் காயமடைந்துள்ளனர்.

சூரியூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்ற ரஞ்சித் குமார் (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:பனமடங்கி எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்.. திடீரென கிணற்றில் விழுந்த காளை!

இதில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக 13 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில், பீரோ, தங்கக்காசு, வெள்ளிக்காசு, ரொக்கம் என ஏராளமான பரிசுப்பொருட்கள் வாரி வழங்கப்பட்டன.

இந்த போட்டியில் 17 காளைகளை அடக்கிய சிறந்த மாடு பிடி வீரர் திருச்சி மாவட்டம் நவல்பட்டு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற இளைஞர் முதல் பரிசாக இருசக்கர வாகனத்தை தட்டி சென்றார். வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சித்குமார், "இதுவரை 50க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு, 200க்கும் மேற்பட்ட காளைகளை அடக்கியதாகவும் தெரிவித்தார். மேலும், என்னுடன் இருக்கும் நபர்கள் இல்லை என்றால் என்னால் முதல் பரிசை வாங்கியிருக்க முடியாது. தான் 12ம் வகுப்பு படிப்பதில் இருந்தே பயிற்சி எடுத்து வருவதாகவும்" தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details