தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி அருகே தென்னை மரங்களில் வெள்ளை ஈக்கள் பரவாமல் தடுக்க விவசாயிகளுக்குப் பயிற்சி! - whiteflies prevention in coimbatore

Whiteflies prevention training: ஆள் இல்லாத விமானம் மூலம் வெள்ளை ஈக்கள் பரவாமல் தடுக்க மருந்து தெளிக்கும் முறையை வேளாண்மைத் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தனர்

பொள்ளாச்சி அருகே தென்னை மரங்களில் வெள்ளை ஈக்கள் பரவாமல் தடுக்க விவசாயிகளுக்கு பயிற்சி
பொள்ளாச்சி அருகே தென்னை மரங்களில் வெள்ளை ஈக்கள் பரவாமல் தடுக்க விவசாயிகளுக்கு பயிற்சி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 14, 2024, 8:58 PM IST

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆவல்பம்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் தென்னையில் ருகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைத் தடுக்கும் விதமாக விவசாயிகளுக்கு இயற்கை பராமரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் தென்னை வளர்ச்சி வாரிய இயக்குநர் அறவாழி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பெங்களூரு தேசிய வேளாண் பூச்சிகள் மூலாதார அமைப்பு விஞ்ஞானி செல்வராஜ், விவசாயிகளுக்கு வெள்ளை தாக்குதல் குறித்து எடுத்துரைத்தார்.

இதில் நன்மை செய்யும் பூச்சிகள் 90% சதவீதமும், தீமை செய்யும் பூச்சிகள் 10 சதவீதம் உள்ளது. இயற்கை முறையில் உள்ள மருந்துகள் வாங்கி வெள்ளை ஈக்களை அழிக்க முடியும் எனவும், கடந்த 2017ஆம் ஆண்டு அதிகமாகத் தென்னை மரங்களைத் தாக்கிய ஈக்கள், நான்கு வகை கொண்ட வெள்ளை ஈக்கள் உள்ளது.

கடந்த காலங்களில் நாட்டு மரங்கள் அதிக மகசூல் தந்தது, தற்போது இளநீர் விற்பனைக்காக நெட்டை, குட்டை தென்னை மரங்களை விவசாயிகள் அதிகமாக வளர்ப்பதால் வெள்ளை ஈ தாக்குதல் அதிகமாக உள்ளது. மற்ற தென்னை மரங்களுக்குப் பரவாமல் இருக்க இயற்கை மருந்துகள் கொண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

மேலும், இதுகுறித்து தொடர்ந்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய சலுகைகள் தரப்படுகிறது எனத் தெரிவித்தார். மேலும் ஆள் இல்லா விமானம் மூலம் தென்னை மரங்களுக்கு மருந்துகள் தெளிக்கும் முறை செய்து காட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பயிர் நோயியல் துறை பேராசிரியை மீனா, பூச்சியியல் துறை பேராசிரியர் அருள் பிரகாஷ், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் தளி தென்னை நாற்றுப் பண்ணை மேலாளர் ரகோத்தமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: கோவையில் குழந்தைகள் கடத்தல் கும்பல் குறித்துப் பரவும் தகவல் முற்றிலும் வதந்தி - கோவை எஸ்.பி பத்ரி நாராயணன்

ABOUT THE AUTHOR

...view details