சேலம்:சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள பூவனூர் பகுதியில் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனது மனைவி வேதவள்ளியுடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் திருமணத்திற்கு இன்று சென்றுள்ளார். இரு சக்கர வாகனம் சுக்கம்பட்டி அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி வேகத்தை இருப்பதால் லாரியின் வேகத்தை ஓட்டுநர் குறைத்துள்ளார்.
அப்போது பின்னால் வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் லாரியின் பின்புறம் நின்றதாக தெரிகிறது. அந்த நேரத்தில் பின்னால், சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து இரண்டு இரு சக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியுள்ளது.
இதில் மூன்று வயது குழந்தை உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் வேதவல்லியின் கணவர் லட்சுமணன் பலத்த காயங்களுடன் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.