தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கோட்' பார்க்கும் ஆர்வத்தில் நோ பார்க்கிங்கில் வண்டி நிறுத்திய ரசிகர்கள்! போக்குவரத்து போலீஸ் எடுத்த அதிரடி ஆக்ஷன்! - Fine for Vijay fans Vehicles

Fine for Vijay fans: சென்னை குரோம்பேட்டையில் திரையரங்கிற்கு கோட் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள் நோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

வாகனங்களுக்கு அபராதம் விதித்த போலீசார்
வாகனங்களுக்கு அபராதம் விதித்த போலீசார் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 5:56 PM IST

சென்னை:வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 68ஆவது படமாக உருவாகியுள்ளது தி கோட். பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மோகன், வைபவ், ஜெயராம், பிரேம்ஜி, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

வாகனங்களுக்கு அபராதம் விதித்த போலீசார் (Credits - ETV Bharat Tamil Nadu)

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கிய தி கோட் இன்று உலகளவில் 5 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சென்னை குரோம்பேட்டை திரையரங்கில் இன்று காலை 9 மணி அளவில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்போது அந்த தியேட்டரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்கள் படம் பார்க்க ஒரே நேரத்தில் கூடியதால் அவர்களின் இருசக்கர வாகனம் நிறுத்த இடம் இல்லாததால் வாகனங்களை ஜிஎஸ்டி சாலை ஓரம், ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தி விட்டு சென்றனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் நோ பார்க்கிங்கில் ஜிஎஸ்சி சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து அபராத ரசிதை வாகனத்தில் ஒட்டிவிட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:நரிக்குறவர், மாற்றுத்திறனாளிகளுக்கு கோட் பட டிக்கெட் இலவசம்.. தூத்துக்குடி விஜய் ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம் - GOAT Free Tickets

ABOUT THE AUTHOR

...view details