தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜன.16 காணும் பொங்கல்... மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த வாகனங்களுக்கு தடை..! - KAANUM PONGAL

ஜனவரி 16 ஆம் தேதி காணும் பொங்கலையொட்டி சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை மெரினா (கோப்புப்படம்)
சென்னை மெரினா (கோப்புப்படம்) (credit - @UpdatesChennai X Account)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 14, 2025, 6:43 PM IST

சென்னை: இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், '' 16.01.2025 அன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

1. காமராஜர் சாலையில் பொது மக்கள், சாலையில் அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது.

2. மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை சாலை) அதிகரிக்கும் போது போர் நினைவுச் சின்னத்தில் இருந்து (War Memorial) வரும் வாகனங்கள் வழக்கம் போல் கலங்கரை விளக்கம் (Light House) நோக்கி அனுமதிக்கப்படும். கலங்கரை விளக்கத்தில் (Light House) இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக கட்டாயமாக திருப்பப்பட்டு (Compulsory Left Diversion) பாரதி சாலை, பெல்ஸ் சாலை, விக்டோரியா விடுதி வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

3. வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை, பெல்ஸ் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (விக்டோரியா விடுதி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்)

4.கண்ணகி சிலையிலிருந்து பாரதி சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் ஒருவழி பாதையாக செயல்படும் பெல்ஸ் சாலை, பாரதி சாலை சந்திப்பில் இருந்து கண்ணகி சிலை நோக்கி நோ என்ட்ரி ஆகவும் செயல்படும்.

5.காமராஜர் சாலையில் இருந்து கலங்கரை விளக்கம் நோக்கி வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் 13.00 மணி முதல் 22.00 மணி வரை அனுமதிக்கப்படாது. வாகன ஒட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பின்வரும் பார்க்கிங் இடங்கள் ஒதுக்கப்படும்.

1.ஃபோர்ஷோர் சாலை

2.விக்டோரியா வார்டன் விடுதி

3.கலைவாணர் அரங்கம் பார்க்கிங்

4.பிரசிடென்சி கல்லூரி

5.மெட்ராஸ் பல்கலைக்கழகம்

6.டிடி கேந்திராவிற்கு அப்பால் ஆடம்ஸ் சாலை (சுவாமி சிவானந்தா சாலை)

7.MRTS-சேப்பாக்கம்

8. லேடி வெலிங்டன் பள்ளி

9.குயின் மேரிஸ் மகளிர் கல்லூரி

10.சீனிவாசபுரம் லூப் ரோடு/மைதானம்

11.பி.டபிள்யூ.டி மைதானம் (தலைமைச்செயலகத்திற்கு எதிரே)

12.செயின்ட் பேட் மைதானம்

13.அன்னை சத்யா நகர்

14.ஈ.வி.ஆர்.சாலை, மருத்துவக் கல்லூரி மைதானம் (வேன் பார்க்கிங்)

15.தலைமைச்செயலகத்தின் உள்ளே (காவல்துறை வாகனங்கள்)

ABOUT THE AUTHOR

...view details