நீலகிரி:கீழ் கோத்தகிரி துனேறி பகுதியைச் சேர்ந்தவர் பிரதாப்(47), இவர் கோத்தகிரி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர், கோத்தகிரியிலிருந்து கூட்டடா செல்லும் பேருந்தை இயக்கி வருகிறார்.
இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6:30 மணி அளவில் கூட்டடாவில் இருந்து பயணிகளுடன் கோத்தகிரி நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது கோவில் மட்டம் பகுதியில் சாலையின் நடுவில் மின்கம்பி ஒன்று அறுந்து கிடந்துள்ளது.
ஓட்டுநர் பிரதாப் மின் கம்பியில் உரசாமல் பேருந்தை இயக்க முற்பட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் பிரதாப் பேருந்தின் உள்ளே சுருண்டு விழுந்தார். பின்னர், பேருந்திலிருந்த பயணிகள் அவசர கதவு மற்றும் பின்வழியாக கீழே இறங்கி உயிர் தப்பினர்.