சென்னை: நீட் முதுநிலைத் தேர்வு தேதி குளறுபடியால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும், இது குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என தமிழக மருத்துவ அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டிற்கான நீட் முதுநிலை தேர்வு மார்ச் 3ஆம் தேதி நடத்தப்படும் என்று National Board of Examinations in Medical Sciences அறிவித்திருந்தது. பின்னர் தேர்வை ஜூலை 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தது. ஆனால், ஜூன் 23ஆம் தேதி அன்று முன்கூட்டியே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, தேர்வு தொடங்கப்படுவதற்கு 12 மணி நேரம் முன்பு, அதாவது ஜூன் 22 இரவு 10.30 மணி அளிவில், தேர்வு தேதி குறிப்பிடாமல் தேர்வை ஒத்தி வைப்பதாக அறிவித்தது. இது வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட தேர்வர்களுக்கு மிகவும் சிரமத்தை அளித்தது.
மேலும், ஓரிரு நாட்கள் முன்பாகவே தேர்வு மையம் உள்ளே சென்று தங்கியிருந்தாகவும், இதனால் பெரும்பாலான தேர்வர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வீண்செலவு ஏற்பட்டதாகவும், இதனால் பெண் மருத்துவர்கள், குறிப்பாக கர்ப்பிணி மருத்துவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்நிலையில், இரண்டு வாரங்கள் கழித்து ஜூலை 4ஆம் தேதி அன்று, ஆகஸ்ட் 11ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. அதற்காக தேர்வு மையங்களை தேர்வு செய்ய ஜூலை 19 முதல் 23 வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், வலைத்தளம் சரியான முறையில் வேலை செய்யாததால் சிரமத்திற்கு உள்ளனதாக தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.
அதில், 4 தேர்வு மையங்களை நாம் தேர்வு செய்ய வேண்டும். அதில் ஒன்று ஆந்திராவில் ஒரு மையத்தை நிச்சயமாக தேர்வு செய்ய வேண்டும் என்றிருந்தது. மேலும், தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்றும் கடைசி நேர்த்தில் அறிவிக்கப்பட்டது மட்டுமல்லாமல், தேர்வு மையங்களையும் குறைத்துள்ளனர்.
குறிப்பாக, 259 தேர்வு நகரங்களில் மையங்கள் இருந்த நிலையில், தற்போது தேர்வு தள்ளி வைத்த பிறகு 180ஆக குறைக்கப்பட்டது. அதில், தமிழகத்தில் இருந்த 31 தேர்வு மையங்கள் இருந்ததை 17ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில், 60 சதவீதம் தேர்வர்களுக்கு ஆந்திராவில் நேரடி போக்குவரத்து இல்லாத இரண்டு அல்லது மூன்றாம் நிலை புறநகர்களில் ஒதுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏற்கனவே மன அளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்படும் இளம் மருத்துவர்கள், நிதி நிலைமையாலும் பாதிக்கப்பட நேரிடுகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் பிரச்னை இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும், தமிழக நீட் முதுநிலை தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே அருகிலுள்ள நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இதற்கு முன்னர் இருந்த தேர்வு முறை (single session) நடத்தப்பட வேண்டும். 2 session முறை என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது.
தேர்வரின் வேதனை:இது குறித்து தேர்வு எழுத காத்திருந்த இரு குழந்தைகளுக்கு தாயான ஒருவர் கூறுகையில், "முதல் முறை தேர்வு மையத்தை தேர்வு செய்யும் போது தெலங்கானா மாநிலம் வாரங்கலில் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த மையம் விமான நிலையத்தில் இருந்து மிகவும் தொலைவில் இருந்தது.
மீண்டும் தேர்வு மையம் தேர்ந்தெடுக்க அவகாசம் அளித்த போது, சென்னை, வேலூர், திருவள்ளூர், திருப்பதி ஆகிய இடங்களை தேர்வு செய்திருந்தேன். ஆனால், ராஜமுந்திரியில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணமாக 3 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தியுள்ளோம். ஆனால், பயணத்திற்கு மட்டும் எனக்கும் 12 ஆயிரத்து 500 வரை செல்வாகிறது" என வேதனை தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:பாரத சாரணர் இயக்குநரக வைர விழாவை திருச்சியில் நடத்த முடிவு.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!