தூத்துக்குடி: விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 250 விசைப்படகுகள் மூலம் கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி விசைப்படகு மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, தூத்துக்குடி எல்லைக்குள் கேரள விசைப்படகு மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மீனவர்களுக்காக ஒரு குழு அமைத்து அந்த குழு அறிக்கை ஒன்று சமர்ப்பித்தாகவும் அதில், தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் இரவு, பகல் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என உள்ளதால் அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூறுகிறது. அதனை வலியுறுத்தி தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தின் 245 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 17,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.